Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களை ஆதரிக்கும் விமானப் பயணிகள்

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

வாசிப்புநேரம் -

ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

அதனால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான பயணிகள் விமான நிலையத்தில் முடங்கியுள்ளனர்.

இருந்தபோதும் அந்தப் பயணிகள், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளனர்.

பேரணியால் தாங்கள் பாதிக்கப்பட்டாலும், ஹாங்காங் மக்களுக்குத் தங்கள் ஆதரவு உண்டு எனப் பயணிகள் சிலர் தெரிவித்தனர்.

ஹாங்காங் மக்கள் ஒரு குறிக்கோளுடன் போராடி வருகின்றனர். அதனால் எனது பயணம் தள்ளிப் போனாலும் தவறில்லை என்று ஜெர்மானிய ஆடவர் ஒருவர் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் குரலுக்கு ஹாங்காங் அரசாங்கம் செவிசாய்க்க மறுப்பது குறித்து, மற்றொரு பயணி அதிருப்தி தெரிவித்தார்.

இன்று காலை திறக்கப்பட்ட விமான நிலையத்தில், பிற்பகலில் மீண்டும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடினர்.

அதனால் மீண்டும் விமானச் சேவைகளுக்குப் பாதிப்பு ஏற்படத் தொடங்கியது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்