Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதுவகைக் கொரோனா கிருமிகள் - ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்

புதுவகைக் கொரோனா கிருமிகள் - ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்

வாசிப்புநேரம் -
புதுவகைக் கொரோனா கிருமிகள் - ஹாங்காங்கில் கட்டுப்பாடுகள் கடுமையாகலாம்

(படம்: AFP / Peter PARKS)

உலகளவில் புதுவகைக் கொரோனா கிருமிகள் உருவெடுத்துள்ளதை அடுத்து, ஹாங்காங்கில் மேலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எளிதில் பரவக்கூடிய கிருமி வகைகள் குறித்துக் கூடுதல் கவனம் தேவைப்படுவதாக அந்நகரின் உணவு, சுகாதார அமைச்சர் சோஃபியா சான் (Sophia Chan) கூறினார்.

தனிமைப்படுத்தப்படுவதற்கான உத்தரவுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்காதோர்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

அர்ஜென்டினாவில் இருந்து ஹாங்காங்கிற்குச் சென்ற ஒருவருக்குப், புதிதாக உருவெடுத்துள்ள கிருமி வகை அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

அதையும் சேர்ந்து, புதுவகைக் கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஹாங்காங்கில் சுமார் 260-ஆனது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் வெளிநாடுகளிலிருந்து ஹாங்காங் சென்றவர்கள்.

ஹாங்காங்கில் கொரோனா கிருமித்தொற்றால் சுமார் 11,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

210 பேர் மாண்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்