Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் : காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்பு

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையின் தடையை மீறி சட்டவிரோத அணிவகுப்பைத் தொடங்கியுள்ளனர். 

வாசிப்புநேரம் -
ஹாங்காங் : காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டக்காரர்கள் அணிவகுப்பு

(படம்: AFP)

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல்துறையின் தடையை மீறி சட்டவிரோத அணிவகுப்பைத் தொடங்கியுள்ளனர்.

சொகுசுப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகளையும், உயர்தர விடுதிகளையும் கொண்ட சிம் சா சுய் (Tsim Sha Tsui) வட்டாரத்தில் அணிவகுத்துச் செல்ல, காவல்துறை தடை விதித்துள்ளது.

இதற்குமுன் நேர்ந்த வன்செயல்களைக் காரணம் காட்டிப் பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து நேரலாமெனக் காவல்துறை அஞ்சுகிறது.

ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆயிரக்கணக்கானோர் பேரணியில் கலந்துகொண்டு பெய்ச்சிங் ஆதரவு அரசியல் தலைவர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

நேற்று பேரணி ஒன்றுக்காகத் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்துகொண்டிருந்த இளையரை, ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கியதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சினமடைந்துள்ளனர்.

அதை வெளிப்படுத்தும்விதமாகவே தடையையும் மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதாகச் சிலர் குறிப்பிட்டனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்