Images
  • HK Protest Police
    (படம்:  AP/Vincent Yu)

ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

ஹாங்காங்கின் காவல்துறை, இன்று நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டத்தில், மோதல்களை எதிர்பார்த்து பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட 2,000 அதிகாரிகள், பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஷா டின்னில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய கட்டடங்கள், காவல் நிலையம், பெரிய போக்குவரத்து மையம், கடைத்தொகுதி ஆகிய இடங்களைத் தாக்கக்கூடும் என்று அதிகாரிகள்
எதிர்பார்க்கிறார்கள்.

நேற்று, சீனப் பெருநில எல்லையில் இருக்கும் ஹாங்காங்கின் ஷெங் ஷுயி (Sheng Shui) நகரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மோதல்கள் வெடித்தன.

குறைந்தது 5 காவல்துறை அதிகாரிகள் காயமுற்றனர்.

மேலும் பல நிருபர்களும் காயமுற்றனர் என்று The South China Morning Post நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது. 

Top