Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: காதலைத் தடுக்க ஆண்களையும் பெண்களையும் பிரித்த பள்ளி

சீனா: மாணவர்களிடையே காதல் வளர்வதைத் தடுக்க இடைவேளை நேரத்தின்போது சிறுவர்களையும் சிறுமிகளையும் பிரித்துள்ளது சீனாவிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளி.

வாசிப்புநேரம் -
சீனா: காதலைத் தடுக்க ஆண்களையும் பெண்களையும் பிரித்த பள்ளி

(படம்: Pixabay)

சீனா: மாணவர்களிடையே காதல் வளர்வதைத் தடுக்க இடைவேளை நேரத்தின்போது சிறுவர்களையும் சிறுமிகளையும் பிரித்துள்ளது சீனாவிலுள்ள ஓர் உயர்நிலைப் பள்ளி.

ஹீ னான் மாநிலத்தில் உள்ள எனும் அந்தப் பள்ளியின் விதிகளைப் பற்றி Pear Video எனும் செய்தித் தளத்திடம் மாணவர்கள் கூறியிருக்கின்றனர்.

சிறுவர்களும் சிறுமிகளும் கைகளைப் பிடித்துக்கொண்டு நடப்பது, ஒருவரோடு ஒருவர் தனியாக நேரத்தைச் செலவழிப்பது ஆகியவற்றுக்குப் பள்ளி தடை விதித்துள்ளதாக மாணவர்கள் சொன்னார்கள்.

பள்ளி உள்ள சுய்ப்பிங் வட்டாரத்தின் கல்வித்துறை ஊழியர் ஒருவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.

விதிகளை மீறும் மாணவர்கள் பள்ளியைவிட்டு நீக்கப்படலாம்.

பள்ளியின் செயல் சீன சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் செயல் தேவையானதா, அது வெற்றிபெறுமா என்பது குறித்து இணையவாசிகள் விவாதித்து வருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்