Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: வீடில்லா ஆடவருக்கு நிவாரண நிலையங்களில் அனுமதி மறுப்பு

ஜப்பானிய மக்கள் ஹகிபிஸ் (Hagibis) சூறாவளியிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் தேடிய வேளையில் ஒரு வீடில்லா ஆடவருக்கு நிவாரண நிலையங்களில் அனுமதி வழங்கப்படவில்லை.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: வீடில்லா ஆடவருக்கு நிவாரண நிலையங்களில் அனுமதி மறுப்பு

(படம்: Kyodo News via AP)

ஜப்பானிய மக்கள் ஹகிபிஸ் (Hagibis) சூறாவளியிலிருந்து தப்பிக்க பாதுகாப்பான இடம் தேடிய வேளையில் ஒரு வீடில்லா ஆடவருக்கு நிவாரண நிலையங்களில் அனுமதி வழங்கப்படவில்லை.

தோக்கியோவில் 64 வயது ஆடவர் ஒருவர் நிவாரண நிலையமாக மாற்றப்பட்ட ஒரு தொடக்கப்பள்ளிக்குக் கடந்த வாரம் சென்றார்.

அப்போது அவர் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டார். அதிகாரிகள் அவரின் வீட்டு முகவரியைக் கேட்டனர்.

ஆடவர் தமக்கு தோக்கியோவில் வீடில்லை என்று கூறியவுடன் அவர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

செல்ல வேறு இடமில்லாமல், ஆடவர் ஒரு கட்டடத்தின் நுழைவாயிலில் இரவைக் கழித்தார்.

அந்தச் சம்பவத்தை எதிர்த்து மக்கள் சமூக ஊடகங்களில் குரல் எழுப்புகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, நாட்டின் நிவாரண நிலையங்களில் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இடமளிக்கப்படவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்