Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஆர்ப்பாட்டத்துக்குப் பின் சீரமைக்கப்பட்ட வளாகத்தில் முதல் சட்டமன்றக் கூட்டம்

ஹாங்காங்கில் ஜூலை மாதம் முதல் தேதிக்குப் பிறகு இன்று முதன்முறை சட்டடமன்றக் கூட்டம் இடம்பெறவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: ஆர்ப்பாட்டத்துக்குப் பின் சீரமைக்கப்பட்ட வளாகத்தில் முதல் சட்டமன்றக் கூட்டம்

கேரி லாம், ஹாங்காங்கின் தலைமை நிர்வாகி. (படம்: Reuters)


ஹாங்காங்கில் ஜூலை மாதம் முதல் தேதிக்குப் பிறகு இன்று முதன்முறை சட்டடமன்றக் கூட்டம் இடம்பெறவிருக்கிறது.

ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம், சட்டமன்ற வளாகத்தில் வருடாந்தரக் கொள்கை விளக்கவுரையாற்றவிருக்கிருக்கிறார்.

ஜூலை மாதம், ஹாங்காங் சட்டமன்ற வளாகத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர்.

அதன்பிறகு அந்த வளாகம் அண்மையில்தான் சீரமைக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான அம்சங்களுக்குத் தாம் முன்னுரிமை கொடுக்கவிருப்பதாக திருமதி லாம் கூறினார்.

வீடமைப்பு, நிலம் தொடர்பான அம்சங்களில் அவர் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய மசோதாவை மீட்டுக்கொள்ளும் தீர்மானமும் இன்று சட்டமன்றத்தில் முன்வைக்கப்படக்கூடும்.

சந்தேக நபர்களைச் சீனாவுக்கு அனுப்பி விசாரணை செய்ய வழிவகுக்கும் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால், கடந்த நான்கு மாதங்களாக ஹாங்காங்கில் அரசியல் நெருக்கடி தொடர்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்