Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஹாங்காங் அரசாங்கம்

ஹாங்காங்குக்கான சிறப்புத் தகுதியை அமெரிக்கா மீட்டுக்கொண்டால் அது இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஹாங்காங் அரசாங்கம் எச்சரித்துள்ளது. 

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும்: ஹாங்காங் அரசாங்கம்

படம்: Reuters/Ben Blanchard

ஹாங்காங்குக்கான சிறப்புத் தகுதியை அமெரிக்கா மீட்டுக்கொண்டால் அது இரு தரப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று ஹாங்காங் அரசாங்கம் எச்சரித்துள்ளது.

சீன நாடாளுமன்றம், ஹாங்காங்குக்கான புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டத்துக்கு நேற்று ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து, இன்று தம் முடிவு குறித்து அமெரிக்க அதிபர் அறிவிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வாஷிங்டனை ஹாங்காங் வலியுறுத்தியது.

தங்கள் வேறுபாடுகளை மறந்து கனவுகளை நிறைவேற்ற ஒன்றுபட வேண்டும் என்று ஹாங்காங்வாசிகளுக்குத் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) வேண்டுகோள் விடுத்துள்ளார். அவருடைய கருத்துகளை உள்ளூரின் பல்வேறு நாளேடுகளும் வெளியிட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்