Images
  • carrie lam
    படம்:  REUTERS/Joyce Zhou

ஹாங்காங்கில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு

ஹாங்காங்கில் கிருமிப்பரவல் மோசமடைந்து வருவதால், சட்டமன்றத் தேர்தலை, தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) பின்னொரு நாளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

அந்நகரின் ஜனநாயக ஆர்வலர்களுக்கு அது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கடந்த 7 மாதங்களில் செய்திராத மிகக் கடினமான முடிவு அது என்று வருணித்த திருவாட்டி லாம், மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்க அந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறினார்.

சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைக்க, மத்திய அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதாவும் திருவாட்டி லாம் குறிப்பிட்டார்.

ஹாங்காங்கில் சட்டமன்றத் தேர்தல் குறித்து முடிவு செய்வதில் COVID-19 நோய்ப்பரவலைக் கருத்தில் கொள்ள வேண்டியிருப்பதாக முன்னதாகச் சீனா கூறியது.

சட்டமன்றத் தேர்தல் உள்நாட்டு விவகாரம் என்றும் பெய்ச்சிங்கில் சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

தேர்தல் செப்டம்பர் 6ஆம் தேதி இடம்பெறவிருந்தது. 

Top