Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹாங்காங் ஊடகத்துறைப் பெரும்புள்ளி கைது

ஹாங்காங் ஊடகத்துறைப் பெரும்புள்ளி ஜிம்மி லாய் (Jimmy Lai), வெளிநாட்டவருடன் இணைந்து செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். 

வாசிப்புநேரம் -
புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹாங்காங் ஊடகத்துறைப் பெரும்புள்ளி கைது

படம்: AFP/Anthony WALLACE

ஹாங்காங் ஊடகத்துறைப் பெரும்புள்ளி ஜிம்மி லாய் (Jimmy Lai), வெளிநாட்டவருடன் இணைந்து செயல்பட்ட சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீனாவின் புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு முதன்முறை, ஹாங்காங்கில் முக்கியமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லாய்யின் ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த வேறு சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Apple Daily நாளேடு, Next சஞ்சிகை ஆகியவற்றின் உரிமையாளர் திரு. லாய்.

அவ்விரண்டு ஊடகங்களும் ஹாங்காங் ஜனநாயகத்துக்கு ஆதரவாகவும், பெய்ச்சிங்குக்கு எதிராகவும் நிலைப்பாடு கொண்டவை.

ஹாங்காங்கில் பிரிவினைவாதம், பயங்கரவாதம், வெளிநாட்டவருடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்த முனைகிறது புதிய தேசியப் பாதுகாப்புச் சட்டம்.

சென்ற ஆண்டு, ஹாங்காங் அரசாங்கத்துக்கு எதிராக அடிக்கடி நடத்தப்பட்ட போராட்டத்தை ஒடுக்க அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய சட்டம் மக்களின் சுதந்திரத்தைப் பாதிக்காது, அது சிறிய குழுவினரை மட்டுமே குறிவைப்பதாக ஹாங்காங்கும், சீனாவும் கூறி வருகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்