Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: சுரங்க ரயில் சேவைகள் இடையூறின்றிச் செயல்பட்டன

ஹாங்காங்கின் சுரங்க ரயில் சேவைகள் இன்று காலை இடையூறுகளின்றி சீராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. 

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: சுரங்க ரயில் சேவைகள் இடையூறின்றிச் செயல்பட்டன

(படம்: Reuters)

ஹாங்காங்கின் சுரங்க ரயில் சேவைகள் இன்று காலை இடையூறுகளின்றி சீராகச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

முக்கிய மூன்று MRT ரயில் நிலையங்களில் இடையூறுகளை ஏற்படுத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தபோதும் ரயில் சேவைகள் தடங்கல்களின்றி இயங்கின.

ரயில் நிலையங்களுக்குக் குறைவான பயணிகள் வந்ததே அதற்குக் காரணம்.

ஒத்துழையாமை இயக்கத்தை இன்று மீண்டும் தொடங்கவிருப்பதாகச் சென்ற சனிக்கிழமை அவர்கள் கூறியிருந்தனர்.

மத்திய வர்த்தக வட்டாரங்களில் வேலைக்குச் செல்வோரைத் தடுக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதிகமான பயணிகள் வராத காரணத்தால் ஏற்பாட்டாளர்கள் திட்டத்தில் சிறிது மாற்றம் செய்துள்ளனர்.

இன்றிரவு குந்தியிருப்புப் போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிட்டுள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்