Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில், தொலைபேசி மோசடியில் 32 மில்லியன் டாலரை இழந்த 90 வயது மாது

ஹாங்காங்கில் 90 வயது மாது, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடம் 32 மில்லியன் டாலரை இழந்துள்ளதாக அந்நகரக் காவல்துறை கூறியுள்ளது. 

வாசிப்புநேரம் -

ஹாங்காங்கில் 90 வயது மாது, சீனாவைச் சேர்ந்த அதிகாரிகளைப்போல் ஆள்மாறாட்டம் செய்த மோசடிக்காரர்களிடம் 32 மில்லியன் டாலரை இழந்துள்ளதாக அந்நகரக் காவல்துறை கூறியுள்ளது. .

அதுவே, ஹாங்காங்கின் ஆகப் பெரிய தொலைபேசி மோசடி என்று கூறப்படுகிறது.

ஹாங்காங்கில், செல்வந்தர்களான முதியோரைக் குறி வைத்து நடத்தப்படும் தொலைபேசி மோசடிகள் அதிகரித்துள்ளன.

சென்ற ஆண்டு, மோசடிக்காரர்கள், சீன அரசாங்கப் பாதுகாப்பு அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்து, அந்த மாதைத் தொடர்புகொண்டனர்.

சீனாவில், ஒரு கடுமையான குற்றச் சம்பவத்தில் அவரது அடையாளம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் அந்த மாதிடம் கூறினர்.

பாதுகாப்புக்காகவும் கண்காணிப்புக்காகவும் அவரது வங்கியில் உள்ள பணத்தை, விசாரணைக் குழுவின் வங்கிற்குப் பரிமாற்றம் செய்யுமாறு மோசடிக்காரர்கள் குறிப்பிட்டதாக South China Morning Post செய்தி நிறுவனம் சொன்னது.

அதை அடுத்து, அந்த மாது 11 வங்கிப் பரிவர்த்தனைகளைச் செய்தார்.

5 மாதங்களில், மொத்தம் 32 மில்லியன் டாலரை மோசடிக்காரர்களிடம் அவர் பறிகொடுத்தார்.

அவருடைய பணிப்பெண், சந்தேகம் எழுந்த பின், அந்த மாதின் மகளைத் தொடர்புகொண்டார்.

பின்னர்தான் அவர், காவல்துறைக்குத் தகவல் தந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.

மோசடியின் தொடர்பில் 19 வயது நபர் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

- AFP  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்