ஹாங்காங்கில் தீவிரமாகும் கலவரம் - ஆர்ப்பாட்டக்காரரை நெஞ்சில் சுட்ட அதிகாரி
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
ஹாங்காங் காவல் அதிகாரி ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை நெஞ்சில் சுடுவதைக் காட்டும் காணொளி Facebook Live மூலம் நேரடியாக ஒளிபரப்பாகியிருக்கிறது.
இன்று காலை சாய் வான் ஹோ (Sai Wan Ho) வட்டாரத்தில் காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின்போது அந்தச் சம்பவம் நடந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கி வைத்த சாலைச் சந்திப்பில் காவல்துறைக்கும் முகமூடி அணிந்த சிலருக்கும் மோதல் எழுந்தது. அப்போது முகமூடி அணிந்த ஆடவரைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் காவல் அதிகாரி ஒருவர் இறங்கினார்.
முகமூடி அணிந்த மற்றோர் ஆடவர் அந்தக் காவல் அதிகாரியை நோக்கி வருகிறார். முகமூடி அணிந்திருந்த ஆடவர் காவல் அதிகாரியால் நெஞ்சில் சுடப்படுகிறார். இவை காணொளியில் பதிவாகியுள்ளன.
சுடப்பட்ட ஆடவரின் நிலை குறித்து இதுவரை தகவல் இல்லை.
ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்ட 22 வயது மாணவர் Alex Chow சென்ற வெள்ளிக்கிழமை மாண்டதையடுத்து, ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.