Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன

ஹாங்காங்கில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன

படம்: AFP

ஹாங்காங்கில் தற்போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் நாடாளுமன்றத்திற்கு அருகில் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிக்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அது வன்முறையாக வெடித்தது.

அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைக் கொண்டும் ரப்பர்த் தோட்டாக்களைப் பயன்படுத்தியும் தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்து வருகின்றனர்.

சர்ச்சைக்குரிய சட்ட மசோதாவை இன்று பிற்பகல் 3 மணிக்குள் கைவிட வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அது நடக்காததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.

இன்று காலை முதலே பல்லாயிரம் பேர் அரசாங்க அலுவலகங்களைச் சுற்றியுள்ள சாலைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க நூற்றுக்கணக்கான அதிகாரிகள் தடுப்புகளுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்