Images
  • hk rally
    (படம்: AFP)

ஹாங்காங் காவல்துறை நாளை ஆர்ப்பாட்டத்திற்கு ஆயத்தம்

ஹாங்காங் காவல்துறை, நாளை நடைபெறவிருக்கும் மற்றொரு ஆர்ப்பாட்டத்தைச் சமாளிக்க பாதுகாப்பை வலுப்படுத்த ஆயத்தமாகி வருகிறது.

கிட்டத்தட்ட 2,000 அதிகாரிகள் நாளை பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் ஷா டின்னில் (Sha Tin) நகரத்தில் நடைபெறும்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய கட்டடங்கள், காவல் நிலையம், ஒரு பெரிய போக்குவரத்து மையம், கடைத்தொகுதி ஆகியவற்றை கடந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 10,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் கலந்து கொள்வார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

Top