Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: சீன எல்லையில் பேரணி நடத்தியவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகை

ஹாங்காங்கில் கலவரத் தடுப்புக் காவல்படையினர், சீன எல்லையில் உள்ள நகரில் பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: சீன எல்லையில் பேரணி நடத்தியவர்களைக் கலைக்கக் கண்ணீர்ப் புகை

படம்; AP images

ஹாங்காங்கில் கலவரத் தடுப்புக் காவல்படையினர், சீன எல்லையில் உள்ள நகரில் பேரணி நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியுள்ளனர்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை ஜனநாயக ஆதரவுப் போராட்டக்காரர்களைத் தாக்கியது குற்றக் கும்பலைச் சேர்ந்தோர் என்ற சந்தேகம் நிலவும் வேளையில் இன்றைய பேரணி நடைபெற்றது.

காவல்துறை அதனைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சினத்தை வெளிப்படுத்தினர்.

பாதுகாப்பைக் காரணங்காட்டி யுவான் லாங் (Yuen Long) வட்டாரத்தில் இன்று பேரணி நடத்தக் காவல்துறை அனுமதி மறுத்தது.

ஆனால் மாலை நாலே முக்கால் மணியளவில் சில ஆயிரம் பேர் கூடி, காவல்துறைக்கு எதிராக முழக்கமிட்டனர்.

காவல்துறை அதிகாரிகள் சிலர் குற்றச்செயல் கும்பலுக்கு உடந்தையாகச் செயல்படுவதாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறைகூறினர்.

சென்ற வாரச் சம்பவம் தொடர்பில் அதிகாரபூர்வ விசாரணைக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்