Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நேற்றிரவு நடந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது ஹாங்காங் அரசாங்கம்

ஹாங்காங் அரசாங்கம், நேற்றிரவு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஹாங்காங் அரசாங்கம், நேற்றிரவு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இடம்பெற்ற வன்முறையைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

நேற்றிரவு ஆர்ப்பாட்டக்காரர்கள், மத்திய வட்டாரத்தின் சாலைகளை மறித்தனர். ரயில் நிலையத்தை சேதப்படுத்திய அவர்கள், சில இடங்களில் தீ மூட்டினர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் சட்டவிரோத நடவடிக்கைகள் பொதுமக்களின் உரிமைகளைப் பறிப்பதாக ஹாங்காங் அரசாங்கப் பேச்சாளர் கண்டித்துள்ளார்.

இதற்கிடையே, ஹாங்காங் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று ஹாங்காங் அமெரிக்கத் தூதரகத்தில் மனுக் கொடுத்தனர்.

அதைத் தொடர்ந்து சீனா மீண்டும் அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்