Images
  • hong kong covid 21 jan
    (கோப்புப் படம்: AFP / ANTHONY WALLACE)

AstraZeneca தடுப்பூசித் தொகுப்பு விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்திய ஹாங்காங்

AstraZenecaவிடமிருந்து இந்த ஆண்டு பிற்பாதியில் பெறவிருந்த தடுப்பூசித் தொகுப்பை நிறுத்தி வைத்திருப்பதாக ஹாங்காங் உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய வகைக் கிருமிக்கு எதிராக தடுப்பூசியின் செயல்திறன் குறைவு, பக்க விளைவு அபாயம் ஆகியவை குறித்த கவலை அதற்குக் காரணம் என்று தெரிகிறது.

ஆனால், திட்டமிட்டபடி இவ்வாண்டிற்குள் AstraZeneca தடுப்பூசிகளைப் பெற வேண்டிய தேவை இல்லை, அவை வீணாகிப் போவதைத் தவிர்க்கவே அவ்வாறு முடிவெடுக்கப்பட்டிருப்பதாக ஹாங்காங் சுகாதாரத்துறைத் தலைவர் சோஃபியா சான் குறிப்பிட்டார்.

ஹாங்காங்வாசிகள் ஏழரை மில்லியன் பேருக்குத் தேவையான தடுப்பூசிகள் ஏற்கனவே பெறப்பட்டுள்ளன. BioNTech, Pfizer, Sinovac ஆகிய நிறுவனங்களுடனும் தடுப்பூசிகளைப் பெற ஹாங்காங் ஒப்பந்தம் செய்துள்ளது.

அவ்விரண்டு நிறுவனங்களும் தடுப்பூசிகளை விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளன.

என்றாலும், ஹாங்காங்கில் இதுவரை சுமார் 529,000 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.   

Top