Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீட்டிப்பு

ஹாங்காங்கில் சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீட்டிப்பு 

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் சமூக அளவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று - கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீட்டிப்பு

(கோப்புப் படம்: REUTERS/Tyrone Siu)

ஹாங்காங்கில், இம்மாதத்தில் முதன்முறையாக, 100க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் பெரும்பாலோர் உள்ளூரில் பாதிக்கப்பட்டவர்கள்.

42 நோயாளிகளுக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது தெரியவில்லை.

சமூகத்தில் கண்டறியப்படாத நோய்ப்பரவல் குறித்து அதிகாரிகளிடையே கவலை எழுந்துள்ளது.

கௌலூன் (Kowloon) பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புப் பேட்டைகளில் பலருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டத்தைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் கட்டாயக் கிருமித்தொற்றுப் பரிசோதனைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்டோருக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வேளையில், ஹாங்காங்கில் Pfizer-BioNTech தடுப்பூசிக்கு அவசரகால ஒப்புதலை வழங்க, அரசாங்க ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஹாங்காங்கில் சமூகப் பாதுகாப்புக்காக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் நீட்டிக்கப்படுமென அதன் தலைமை நிர்வாக அதிகாரி கேரி லாம் தெரிவித்துள்ளார்.

தற்போது நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் இந்த வாரம் முடிவுக்கு வரவிருக்கின்றன.

நகரத்தில் நோய்ப்பரவல் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதுகுறித்த மேல் விவரங்களை இன்று பின்னேரம் வெளியிடவிருப்பதாகத் திருமதி லாம், செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்