Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிட்டால் பெருஞ்சேதம் விளையக்கூடும் - ஹாங்காங்கின் கடைசி பிரிட்டிஷ் ஆளுநர்

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில், ஹாங்காங்கின் கடைசி ஆளுநராய்ப் பதவி வகித்த திரு. கிறிஸ் பேட்டன் (Chris Patten), ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிட்டால் பெருஞ்சேதம் விளையக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

ஆர்ப்பாட்டங்கள் முடிவுறாவிட்டால் வேறு வழிகளை நாடவேண்டியிருக்கும் என்ற பெய்ச்சிங்கின் மிரட்டல் எதிர்மறை விளைவுகளைத் தூண்டும் என்றார் அவர்.

BBC வானொலிக்கு அளித்த பேட்டியில் அவர் அவ்வாறு கூறினார்.

பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன், நட்பு நாடுகளின் ஆதரவைப் பெற்று, ஹாங்காங் விவகாரத்தில் சீனா தலையிடாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்றும் திரு. பேட்டன் கேட்டுக்கொண்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்