Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: 12 வயதுப் பிள்ளைகளுக்கு இன்றுமுதல் Pfizer தடுப்பூசி போடப் பதிவுசெய்யலாம்

ஹாங்காங்கில் 12 வயதுப் பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போட, இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம்.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: 12 வயதுப் பிள்ளைகளுக்கு இன்றுமுதல் Pfizer தடுப்பூசி போடப் பதிவுசெய்யலாம்

(கோப்புப் படம்: AFP / ANTHONY WALLACE)

ஹாங்காங்கில் 12 வயதுப் பிள்ளைகளுக்கு Pfizer தடுப்பூசி போட, இன்று முதல் பதிவு செய்துகொள்ளலாம்.

புதுவகைக் கிருமிகள் பரவுவதை, தடுப்பூசித் திட்டத்தின்மூலம் தடுக்க ஹாங்காங் முயன்றுவருகிறது. சுமார் 240,000 பிள்ளைகளுக்கு ஹாங்காங் அரசாங்கம் தடுப்புமருந்துகளை வழங்குகிறது.

ஹாங்காங்கிலுள்ள 7.5 மில்லியன் பேரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் செய்வதில், அதிகாரிகள், சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதுவரை அங்குள்ள மக்கள்தொகையில், 15 விழுக்காட்டினர் மட்டுமே, தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

இன்னும் கூடுதலான ஆசிரியர்களும் மாணவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டால், பள்ளிகளில் நடப்பில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என அதிகாரிகள் கூறினர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தற்போது மாணவர்கள், அரை நாள் மட்டுமே பள்ளிக்குச் செல்கின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்