Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்களிடையே மாறுவேடத்தில் அதிகாரிகள் - ஒப்புக்கொண்ட காவல்துறை

ஹாங்காங் காவல்துறை, அண்மை ஆர்ப்பாட்டங்களின்போது தனது அதிகாரிகள் மாறுவேடமிட்டுச் சென்றதை ஒப்புக் கொண்டதோடு அதைத் தற்காத்தும் பேசியுள்ளது .

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்களிடையே மாறுவேடத்தில் அதிகாரிகள் - ஒப்புக்கொண்ட காவல்துறை

(படம்: REUTERS/James Pomfret)

ஹாங்காங் காவல்துறை, அண்மை ஆர்ப்பாட்டங்களின்போது தனது அதிகாரிகள் மாறுவேடமிட்டுச் சென்றதை ஒப்புக் கொண்டதோடு அதைத் தற்காத்தும் பேசியுள்ளது .

வன்முறையைத் தூண்டும் ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்களைக் கண்காணிக்கும் வகையில், மாறுவேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்களைப் போல கருப்பு டி-சட்டை அணிந்த காவல்துறை அதிகாரிகள், கூட்டத்தில் திடீரென்று ஒரு சிலரைக் கைதுசெய்வதைக் குறித்துப் பெரும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் சிலர், ஆர்ப்பாட்டக்காரர்களைச் சிக்கவைக்கும் நோக்கில் அவர்களுடைய பைகளில் சில பொருள்களை வைப்பது காணொளியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நிருபர் ஒருவர் கூறினார்.

இத்தகைய செயல்களில் ஈடுபடும் காவல்துறையைப் பொதுமக்கள் இனிமேல் எப்படி நம்புவர் என அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், அத்தகைய நடவடிக்கையைக் காவல்துறை மறுத்தது.

ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவை என்றுகூறி தடிகள், கவண்வில், (slingshot) சுத்தியல் முதலியவற்றைக் காவல்துறை காட்சிக்கு வைத்தது.

ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 11) மூண்ட வன்முறையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரை ரத்தக் காயம் ஏற்படும் வரை தாக்கி, காவல்துறை கைது செய்தது. அப்போது சுமார் 45 பேர் காயமடைந்தனர்.

நேற்று (ஆகஸ்ட் 12) விமான நிலையத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடியதால் அனைத்து விமானச் சேவைகளும் ரத்துசெய்யப்பட்டன. விமானச் சேவைகள் இன்று (ஆகஸ்ட் 13) வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகக் கூறப்பட்டாலும் இன்னமும் சில சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்