Images
  • hk
    படம்: AFP

ஹாங்காங் ஆர்ப்பாட்டம்: முக்கிய இடங்கள் முடங்கின

ஹாங்காங்கில் தற்போது ஆர்ப்பாட்டம் உச்சத்தை எட்டியுள்ளது.

அரசாங்கத்தின் சட்ட மசோதாவை எதிர்த்து
பல்லாயிரம் பேர் அரசாங்க அலுவலகங்களைச் சுற்றியுள்ள சாலைகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க நூற்றுக்கனக்கான அதிகாரிகள் தடுப்புகளுடன் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகரின் முக்கிய இடங்கள் முடங்கியுள்ளண. வர்த்தக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, இரண்டாம் வாசிப்புக்கு வருவதை ஹாங்காங் அரசாங்கம் தற்போது ஒத்தி வைத்திருக்கிறது.

சட்ட மசோதாவை ரத்து செய்யும் வரை ஆர்ப்பாட்டம் நீடிக்கும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.

குறிப்பிட்ட சில குற்றச்செயல்களோடு தொடர்புடைய சந்தேகநபர்களை, சீனாவுக்கு அனுப்பி விசாரிக்கும் புதிய சட்ட மசோதாவைப் பலரும் எதிர்த்து வருகின்றனர்.




 

Top