Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் : கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன

ஹாங்காங்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலகத்தடுப்பு காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகையையும் ரப்பர் தோட்டாக்களையும் நேற்று மீண்டும் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.   

வாசிப்புநேரம் -
ஹாங்காங் : கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை, ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டன

படம்: AP photo

ஹாங்காங்கில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கலகத்தடுப்பு காவல்துறை அதிகாரிகள் கண்ணீர் புகையையும் ரப்பர் தோட்டாக்களையும் நேற்று
மீண்டும் பயன்படுத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

12க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

ஹாங்காங்கில் தொடர்ந்து பத்தாவது வார இறுதியாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

காவல்துறையினரிடமிருந்து பிடிபடாமல் இருக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து நகரத்தின் பல பகுதிகளில் நகர்ந்து கொண்டே சென்றனர்.

சிம் ஷா சுய் (Tsim Sha Tsui), வாஞ்சாய்(Wanchai) வணிக வட்டாரங்களில்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அதனால், கூட்டத்தைக் கலைக்க காவல்துறை கண்ணீர் புகையையும் ரப்பர் தோட்டக்களையும் பயன்படுத்தியது.
  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்