Images
  • HKP
    படம்: AP

சீன எல்லையில் ஹாங்காங் மக்கள் பேரணி

சீனப் பெருநில எல்லையில் அமைந்திருக்கும் ஹாங்காங்கின் ஷாட்டின் (Sha Tin) வட்டாரத்தில் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்துகின்றனர்.

காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியுள்ளது. சுமார் 2,000 அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மோதல்கள் நேரலாம் என அஞ்சப்படுவது அதற்குக் காரணம்.

நேற்று எல்லைப்பகுதியில் பெரும்பாலும் அமைதியாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பின்னர் வன்முறை வெடித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் குடைகளையும், தலைக்கவசங்களையும் காவல்துறையினரை நோக்கி வீசினர்.

அதிகாரிகள் குடமிளகாயிலிருந்து தயாரிக்கப்படும் ரசாயனத்தைத் தெளித்துக் கூட்டத்தினரைக் கலைக்க முயன்றனர். 

Top