Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மேலும் பல ஆர்ப்பாட்டங்களை எதிர்நோக்கியிருக்கும் ஹாங்காங்

ஹாங்காங்கில், இன்று மறுபடியும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மேலும் பல ஆர்ப்பாட்டங்களை எதிர்நோக்கியிருக்கும் ஹாங்காங்

(படம்: AFP)

ஹாங்காங்கில், இன்று மறுபடியும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சியுங் க்வான் ஓ (Tseung Kwan O) வட்டாரத்தில், பிற்பகலில் ஆர்பாட்டக்காரர்கள் பேரணியில் ஈடுபடுவர் என்றும் மாலை 4 மணிக்கு இரண்டாவது பேரணி வேறு பகுதியில் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கில், ஒன்பதாவது வாரமாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

ஹாங்காங் பிரிவினைச் சட்டத்தின்கீழ், தேவைப்பட்டால் ஹாங்காங், சீன ராணுவத்தின் உதவியை நாடமுடியுமெனப் பெய்ச்சிங் முன்னதாக எச்சரித்திருந்தது.

இன்றுகாலை, ஹாங்காங் அரசாங்கம் அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

அதில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுமென்றே சமூக அமைதியைச் சீர்குலைத்து, தேசிய அரசுரிமைக்குச் சவால் விடுத்துவருவதாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்