Images
  • Hk protest
    படம்: AFP/Philip Fong

ஹாங்காங்கில் அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு அலை

ஹாங்காங்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இன்னும் தணிந்தபாடில்லை.

கடந்த சுமார் இரண்டரை மாதங்களாக, சர்ச்சைக்குரிய மசோதா தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துவருகின்றனர்.

இன்று ஹாங்காங்கின் அனைத்துலக விமான நிலையத்திலும், வான் சாய் (Wan Chai) பகுதியிலும், பேரணி நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் மீதான நெருக்குதலை அதிகரிப்பது அதன் நோக்கம்.

நேற்று ஆயிரக்கணக்கானோர் உரிய அனுமதியின்றிப் பேரணி நடத்தினர்.

காவல்துறை அதிகாரிகள் மீது அவர்கள் செங்கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

பதிலுக்குக் காவல்துறையினர் கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியதுடன், தடியடியும் நடத்தினர்.

பிரபல சுற்றுப்பயணத் தலமான சிம் ஷா சுயி (Tsim Sha Tsui) வட்டாரத்தின் காவல்நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினர்.

காவல்துறையின் பதில் நடவடிக்கையை அடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற மாது ஒருவருக்குக் கண்ணில் காயம் ஏற்பட்டதாகவும், அவரது பார்வை பறிபோனதாகவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

மாதின் கண்ணில் ரப்பர் தோட்டா பாய்ந்ததாய்த் தெரிவிக்கப்பட்டது. 

Top