Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்: உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண மீண்டும் அனுமதி

ஹாங்காங்: உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண மீண்டும் அனுமதி 

வாசிப்புநேரம் -
ஹாங்காங்: உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண மீண்டும் அனுமதி

ANTHONY WALLACE/AFP

ஹாங்காங் உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ண, அண்மையில் விதிக்கப்பட்ட தடையை அதிகாரிகள் மீட்டுக்கொள்ளவிருக்கின்றனர்.

தடையினால் ஊழியர்கள் பலர் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

நாளை முதல் மீண்டும், காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் மட்டும் உணவகங்களில் அமர்ந்து ஹாங்காங்வாசிகள் உணவருந்தலாம்.

ஆனால் உணவருந்தும் வாடிக்கையாளர் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்படும்.

ஒவ்வொரு மேசையிலும் இருவர் மட்டுமே உட்கார முடியும். மேசைகளுக்கு இடையே 1.5 மீட்டர் இடைவெளி கட்டாயம்.

காலை 5 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உணவகங்களில் அமர்ந்து உணவு உட்கொள்ள அனுமதி வழங்கப்படுமென்று ஹாங்காங் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, திங்கள்கிழமையன்று உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நேற்று நடப்புக்கு வந்தன.

ஹாங்காங்கில் மீண்டும் தலைதூக்கியுள்ள கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவை அறிவிக்கப்பட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்