Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்-காவல்துறையினர் இடையே கைகலப்பு

சீனப் பெருநில எல்லையில் இருக்கும் ஹாங்காங்கின் ஷெங் ஷுயி (Sheng Shui) நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள்-காவல்துறையினர் இடையே கைகலப்பு

(படம்: AFP/Philip Fong)

சீனப் பெருநில எல்லையில் இருக்கும் ஹாங்காங்கின் ஷெங் ஷுயி (Sheng Shui) நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாங்காங்கில் வரி ஏய்ப்பு செய்யும் சீன வர்த்தகர்களை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதாய் ஆர்ப்பாட்டக்காரர்கள் சாடினர்.

அந்த வர்த்தகர்கள் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களை ஹாங்காங்கில் வாங்கி, எல்லைக்கு அப்பால் அதிக விலைக்கு விற்பதாய்க் குறைகூறப்பட்டது.

அண்டை மாநிலமான ஷென்ஸென்னிலிருந்து (Shenzhen) ஹாங்காங் வருவோருக்கு ஒரு வார கால விசா வழங்குவதை நிறுத்துதல்;

அனுமதியின்றிப் பொருள்களை வாங்கி விற்பதில் லாபம் ஈட்டும் சீன வர்த்தகர்களுக்குத் தடை விதித்தல்;

சாலையோரக் கடைக்காரர்கள் தொடர்பில் சட்ட அமலாக்கத்தைக் கடுமையாக்குதல் போன்றவை ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருக்குமாயின் வட்டார மருந்துக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வேளையில், மனித உரிமை ஆர்வலர் லியு சியாபோவின் (Liu Xiaobo) இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்துகின்றனர்.

சீனாவில் மனித உரிமை மேம்பாடு, அரசியல் சீர்திருத்தம் போன்றவற்றுக்காக அவர் அமைதிக்கான நொபெல் பரிசைப் பெற்றார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்