Images
  • afp
    (படம்: AFP/Manan Vatsyayana)

ஹாங்காங்: ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகை

ஹாங்காங்கின் காவ்லூன் (Kowloon) பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறை கண்ணீர்ப் புகையைப் பயன்படுத்தியுள்ளது.
ஷாம் ஷுவீ போ (Sham Shui Po) வட்டாரத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டக்காரர்கள் பெரிய அளவில் திரண்டனர்.

அங்குள்ள காவல் நிலையத்தின் மீது அவர்கள் laser ஒளிக் கற்றையைக் காட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.

Hungry Ghost Festival எனும் மறைந்த முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விழாவை ஒட்டி ஆர்ப்பாட்டக்காraர்கள் திரண்டனர்.
இருப்பினும், அவர்கள் ஹாங்காங் தலைமை நிர்வாகி கேர்ரி லாம் , மறைந்த முன்னாள் சீன பிரதமர் லீ பேங் ஆகியோரின் படங்களைக் கொண்ட தாள்களை எரித்தனர்.

அது அந்தத் தலைவர்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஹாங்காங் அனைத்துலக விமான நிலையத்தில், 2 நாள்களுக்கு முன் நடத்தப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டங்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.

அதனை, அட்டூழீயம் என்றும், அது பயங்கரவாதச் செயல்போல் இருந்தது என்றும் சீனா வருணித்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள், சீனாவைச் சேர்ந்த இரண்டு ஆடவர்களைக் கட்டி வைத்து, அடித்து துன்புறுத்தினர்.

அவர்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகள் என ஆர்ப்பாட்டக்காரர்கள் நினைத்தனர்.
ஆனால், அவர்களில் ஒருவர் ஒரு சுற்றுப்பயணி என்பதும், மற்றொருவர், சீன செய்தி நிறுவனம் ஒன்றின் நிருபர் என்பதும் பின்னர் தெரியவந்தது 

Top