Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங் தேர்தல் குழுத் தேர்தல் - வாக்குகளை எண்ணுவதில் கடுமையான பிரச்சனை

ஹாங்காங் தேர்தல் குழுத் தேர்தல் - வாக்குகளை எண்ணுவதில் கடுமையான பிரச்சனை

வாசிப்புநேரம் -

ஹாங்காங் தேர்தல் குழுத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவதில் கடுமையான பிரச்சனை இருந்தது என்பதைத் தலைமை நிர்வாகி கேரி லாம் (Carrie Lam) ஒப்புக்கொண்டுள்ளார்.

ஞாயிறு (செப்டம்பர் 19) மாலை வாக்கெடுப்புக்குப் பிறகு சுமார் 4,400 வாக்குகளைக் எண்ணி முடிக்க, 10 மணி நேரத்திற்கு மேல் ஆனது.

வாக்குச் சீட்டுகளைச் சரிபார்ப்பதில் பிரச்சனை இருந்ததால், தாமதம் ஏற்பட்டதாக, ஹாங்காங் தேர்தல் விவகார ஆணையம் குறிப்பிட்டது.

தேர்தல் குழு வாக்கெடுப்பு முடிவு அன்றிரவே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று திருவாட்டி லாம் கூறினார்.

மீண்டும் இதுபோல் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய ஆணையம் அதன் செயல்முறைகளை மேம்படுத்த அவர் உத்தரவிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்