Images
  • hong kong
    (கோப்புப் படம்:: AFP)

மாபெரும் பரிசோதனை நடவடிக்கைக்குப் பிறகு பொது இடங்களைத் திறக்கும் ஹாங்காங்


ஹாங்காங்கில் COVID-19 நோய்த்தொற்று காரணமாக மூடப்பட்ட மதுபானக் கூடங்கள், நீச்சல் குளங்கள், கேளிக்கை பூங்காக்கள் ஆகியவை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

அண்மையில் ஹாங்காங்கில் நோய்த்தொற்றுக்கான பரிசோதனை பெரிய அளவில் நடத்தப்பட்டது.

அதில் சுமார் 2 மில்லியன் பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 42 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டது.

நகரில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன;
இருப்பினும் பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை.

"இப்போது நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம்; இருப்பினும், பொதுமக்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது."

என்று அந்நகர அதிகாரிகள் கூறினர்.

தற்போதைய நிலவரப்படி ஹாங்காங்கில் 4,976 சம்பவங்கள் பதிவாகியுள்ளன; 101 பேர் மாண்டனர்.  

Top