Images
  • india covid (6)
    (படம்: AP /Channi Anand)

இந்தியாவின் மருத்துவமனையில் தீவிபத்து - COVID-19 நோயாளிகள் 16 பேர் மரணம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள பாருச் (Bharuch) நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் கிருமித்தொற்று நோயாளிகள் குறைந்தது 16 பேரும், 2 தாதியரும் மாண்டனர்.

ஏனைய 50 நோயாளிகள், மருத்துவமனை ஊழியர்களாலும் தீயணைப்பாளர்களாலும் காப்பாற்றப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்தது.

முதல் மாடியில் உள்ள கிருமித்தொற்று வார்டில் மூண்ட தீ ஒரு மணிநேரத்திற்குள் அணைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட மின்சாரக் கோளாற்றால் தீ மூண்டதாகத் தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்ற வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 23), மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் மூண்ட தீயில் 13 COVID-19 நோயாளிகள் மாண்டனர்.

- AP, AFP

Top