Images
  • pakistan
    (படம்: AFP/Arif ALI)

முன்னாள் பாதுகாப்பு அதிகாரி அறுவை சிகிச்சை செய்ததால் பாகிஸ்தானிய மூதாட்டி மரணம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் மருத்துவரைப்போல ஏமாற்றிய முன்னாள் பாதுகாவலர் செய்த அறுவைச் சிகிச்சையால், 80 வயது மூதாட்டி மாண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த மருத்துவமனையின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி முகம்மது வாஹிட் பட், ஷமீமா பேகத்தின் முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை செய்ய முயற்சி செய்திருக்கிறார்.

ஷமீமா வீட்டுக்குச் சென்ற பிறகும், வாஹிட் தொடர்ந்து அங்கு இருமுறை சென்று அவருக்குப் பராமரிப்புச் சிகிச்சை வழங்கியதாகக் கூறப்படுகிறது.

"மிகப் பெரிய மருத்துவமனை... அனைத்து மருத்துவர்களும் எல்லா நேரமும் என்ன செய்கிறார்கள் என்பதைக் கண்காணிக்க முடியாது"

- லாகூர் மேயோ மருத்துவமனை

வீட்டுக்குத் திரும்பிய ஷமீமாவின் வலியும் இரத்தக் கசிவும் தீவிரமடைந்தது.

மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றபோதுதான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.
அவர் மாண்டது, அறுவைச் சிகிச்சையால்தானா என்பதை உறுதிப்படுத்த, பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
மோசடி செய்த நபர் இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை AFPஇடம் கூறியது.

இத்தகைய மோசடி வாஹிதுக்குப் புதிதல்ல.
ஈராண்டுக்கு முன்னர், நோயாளிகளிடமிருந்து பணம் பறிக்க முயன்றதற்காக அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

- AFP/vc 

Top