Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முடக்குவாதம் கொண்ட 7 வயது மகனை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாயார்

ஹாங்காங்: சீனாவில் முடக்குவாதம் கொண்ட 7 வயது மகனை அவனது தாயார் மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.

வாசிப்புநேரம் -
முடக்குவாதம் கொண்ட 7 வயது மகனை மருத்துவமனையில் விட்டுச் சென்ற தாயார்

(படம்: Pixabay)

ஹாங்காங்: சீனாவில் முடக்குவாதம் கொண்ட 7 வயது மகனை அவனது தாயார் மருத்துவமனையில் கைவிட்டுச் சென்றார்.

சட்டையில் தைக்கப்பட்ட கடிதத்துடனும், சுமார் $200 பணத்துடனும் மகனை அவர் விட்டுச் சென்றார்.

மகனை பராமரிப்பதால் ஏற்படும் மனச்சுமையையும் நிதிச் சுமையையும் தம்மால் தாங்கமுடியாததால் மகனை விட்டுச் செல்வதாகக் கடித்தில் எழுதியிருந்தார் அந்தத் தாயார்.

அரசாங்கத்திடம் உதவி கோரியும் பயன் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் அவர்.

சிறுவனின் தந்தை ஒரு சாதாரண ஊழியர் எனக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் அழுதுகொண்டிருந்த சிறுவனைக் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மகனோடு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தமக்குத் தோன்றியதுண்டு என்றபோதும், மகனின் அப்பாவி முகத்தைப் பார்த்து அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

நல்லிதயம் படைத்த எவரேனும் மகனை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதுபற்றிக் கருத்துரைத்த அதிகாரிகள், தாயார் தாமாக முன்வந்து தங்களைத் தொடர்புகொள்ளாமற்போனால் அவர்மீது பிள்ளையைக் கைவிட்ட குற்றச்சாட்டு சுமத்தப்படக்கூடும் என்றனர்.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்