Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹனோயில் நடைபெறவுள்ள டிரம்ப்-கிம் இரண்டாம் சந்திப்புக்குக் கிம் எவ்வாறு பயணம் செய்வார்?

அமெரிக்க அதிபரை வியட்நாமின் ஹனோய் நகரத்தில் சந்திக்கவுள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அங்கு எவ்வாறு செல்லவுள்ளார் என்பது குறித்து ஊகம் எழுந்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஹனோயில் நடைபெறவுள்ள டிரம்ப்-கிம் இரண்டாம் சந்திப்புக்குக் கிம் எவ்வாறு பயணம் செய்வார்?

(படம்: AFP)

வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்


அமெரிக்க அதிபரை வியட்நாமின் ஹனோய் நகரத்தில் சந்திக்கவுள்ள வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன், அங்கு எவ்வாறு செல்லவுள்ளார் என்பது குறித்து ஊகம் எழுந்துள்ளது.

அதிபர் டோனல்ட் டிரம்ப்பை இரண்டாம் முறையாகச் சந்திக்கவுள்ள திரு கிம், ஹனோய்க்கு ரயில் வழியாகவோ சாலையில் கார் வாயிலாகவோ செல்லலாம் என்று பலர் ஊகிக்கின்றனர்.

சந்திப்புக்கு முன்னர், பிரபல ரயில் பாதையின் மூலம் ஹனோயை வடகொரியப் பேராளர்கள் சென்றடைந்ததை அடுத்து, திரு கிம்மும் ரயிலில் பயணம் செய்வார் என்று பலர் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் திரு கிம்மும் வடகொரியப் பேராளர்களும் எத்தகைய பயணத்தை மேற்கொள்வர் என்று தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் முதல்முறையாகத் திரு டிரம்ப்பும் திரு கிம்மும் சந்தித்தனர்.

அப்போது சிங்கப்பூருக்குத் திரு கிம், சீனா அனுப்பிய விமானம் மூலம் வந்திருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்