Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Huawei நிறுவனத்தின் புது இயங்குதளம் விரைவில் வெளியீடு?

சீனாவின் Huawei நிறுவனம் அதன் சொந்த இயங்குதளத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் பெயர் Hongmeng.

வாசிப்புநேரம் -
Huawei நிறுவனத்தின் புது இயங்குதளம் விரைவில் வெளியீடு?

படம்: Reuters/Charles Platiau

சீனாவின் Huawei நிறுவனம் அதன் சொந்த இயங்குதளத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் பெயர் Hongmeng.

Huawei நிறுவனத்தின் பொது விவகார தகவல் தொடர்பு பிரிவுக்கான துணைத் தலைவர் ஆண்ட்ரூ வில்லியம்சன் (Andrew Williamson) அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தப்போர் தொடங்கினால் சில மாதங்களில் அதிகாரபூர்வாக அறிமுகம் செய்யத் தயாராக இருக்கும்.

Huawei கைத்தொலைபேசிகளில் இதுவரை பயன்படுத்தப்பட்ட கூகளின் Android இயங்குதளத்துக்குப் பதிலாக Hongmeng செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லியம்சன் புதிய இயங்குதளம் தற்போது சீனாவில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது என கூறினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மதிநுட்பத் தகவல் சொத்து நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, Huawei அதன் இயங்குதளத்தைச் சில நாடுகளில் வர்த்தக அடையாளச் சோதனைக்காகச் சமர்ப்பித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்