Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Huawei-இன் கவனம் ஐரோப்பாவின் பக்கம்?

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei இத்தாலியில் 3.1 பில்லியன் டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
Huawei-இன் கவனம் ஐரோப்பாவின் பக்கம்?

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனத் தொலைத்தொடர்பு நிறுவனமான Huawei இத்தாலியில் 3.1 பில்லியன் டாலரை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அடுத்த மூவாண்டுகளுக்கு அந்த முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவனம் கூறியது.

அமெரிக்கா அண்மையில் Huawei நிறுவனத்தை, முக்கிய பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று அறிவித்தது.

Huawei நிறுவனத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான சர்ச்சைகள் தொடரும் வேளையில், ஐரோப்பாவில் காலூன்றி அதன் செல்வாக்கை அதிகரிக்க Huawei எண்ணம் கொண்டுள்ளது.

திட்டத்தின்மூலம் 1,000 வேலைகள் நேரடியாக உருவாக்கப்படும். 2,000 வேலைகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருக்கும் என்று Huawei நிறுவனம் கூறியது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்