Images
  • Huawei Scraps
    (படம்: AFP)

புது மடிக்கணினி அறிமுகத்தைக் கைவிட்டது Huawei

சீனாவின் Huawei நிறுவனம் புதிய மடிக்கணினி ஒன்றின் அறிமுகத்தை நிறுத்தியுள்ளது.

Huawei நிறுவனத்தின் திறன்பேசி வர்த்தகப் பிரிவுக்கான தலைமை நிர்வாகி ரிச்சர்ட் யு செங்டோங் (Richard Yu Chengdong) அந்தத் தகவலைத் தெரிவித்தார்.

இருப்பினும், Huawei நிறுவனம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தவில்லை.

Huawei தயாரிப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் வாங்குவதைத் தடைசெய்யும் சட்டம் அறிமுகமானதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Matebook எனும் பெயர்கொண்ட மடிக்கணினி வரிசையில், ஆகப் புதிய கணினியை அறிமுகம் செய்யப் போவதாக, Huawei முன்னர் கூறியிருந்தது.

அமெரிக்காவின் Microsoft நிறுவனம் Huawei நிறுவனத்திற்கு Windows இயங்குதளத்தையும் உள்ளடக்கச் சேவைகளையும் விற்பனை செய்வதை நிறுத்திவிட்டதாகச் சில ஊடகங்கள் சென்ற மாதம் கூறியிருந்தன.  

Top