Images
  • human rights (1)
    (படம்: AFP/ Ajay Verma)

மனித உரிமை ஆர்வலர்களைக் கொடுமைப்படுத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, சீனா

மனித உரிமை ஆர்வலர்களைக் கொடுமைப்படுத்துவது, கொலை செய்வது, கைது செய்வது போன்ற செயல்களைச் செய்யும் நாடுகளின் பட்டியலை ஐக்கிய நாட்டு நிறுவனம் வெளியிட்டது.

இந்தியா, சீனா, ரஷ்யா ஆகியவற்றுடன் மொத்தம் 38 நாடுகள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

உலகில், மனித உரிமை மீறல்கள் நடக்கும்போது அது தொடர்பான தகவல்களை ஆர்வலர்களே ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்குத் தருகின்றனர்; அவர்களுக்கான உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

மனித உரிமை ஆர்வலர்களைக் கொடுமைப்படுத்துவது வெட்கக்கேடு என்றும், அத்தகைய செயல்களைக் கைவிடவேண்டும் என்றும் ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியது.
 

Top