Images
  • iphone (1)
    படம்: REUTERS/Michaela Rehle

இந்தியாவில் அதிக அளவில் iPhone-கள் தயாரிக்க திட்டம்

இந்தியாவில் இந்த ஆண்டிலிருந்து அதிக அளவில் iPhone-களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக Foxconn Technologyதலைவர் டெர்ரி கோ (Terry Gou ) தெரிவித்துள்ளார்.

புது வகை iPhone-கள் சென்னையில் தயாரிக்கப்படவிருப்பதாகவும் அவர் கூறினார்.

தயாரிப்புகளுக்கான சோதனை முழுவீச்சில் நடத்தப்படுவதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்தது.

தற்போது பழைய ரக iPhone-கள் இந்தியாவின் பெங்களூரில் தயாரிக்கப்படுகின்றன.

இதுவரை சீனாவில் மட்டுமே அதிக அளவில் iPhone-கள் தயாரிக்கப்பட்டன.

இந்தியாவின் சந்தை மிக பெரியது என்பதால மக்களை ஈர்க்க Apple நிறுவனம் அதன் தயாரிப்புகளை இந்தியாவில் தொடங்கியதாக கவனிப்பாளர்கள் கூறினர்.
 

Top