Images
  • ICERD protest (1)
    (படம்: Amir Yusof)

கோலாலம்பூர் பேரணியில் சுமார் 50,000 பேர் பங்கேற்றனர் - மலேசியக் காவல்துறை

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் பேரணி தொடங்கியுள்ளது. மாலை 4 மணியளவில் சுமார் 50 ஆயிரம் பேர் கூடியதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.

அம்னோ தலைவர் அகமது சஹிட் ஹமீடி (Ahmad Zahid Hamidi) பேரணியை வழி நடத்தினார்.

பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் மெர்டேக்கா சதுக்கத்தை நோக்கிச் சென்றனர்.


இனப் பாகுபாட்டிற்கு எதிரான ஐக்கிய நாட்டு நிறுவன உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் முன்னர் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.


ஆனால் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அறிக்கையை உறுதிசெய்யப்போவதில்லை என்ற புத்ரா ஜெயாவின் முடிவுக்கு நன்றி தெரிவிக்கும் பேரணியாக அது மாறியது.

மலேசிய எதிர்க் கட்சிகளான அம்னோவும், பாஸும் அதற்கு ஏற்பாடு செய்துள்ளன.

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையைக் காவல்துறை வெளியிடவில்லை.

இருப்பினும், பேரணி சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யத் தேவையான அதிகாரிகள் பணியில் இருப்பர் என்று அது உறுதியளித்தது.  

Top