Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியாவில் கடைதிறக்கவிருக்கும் IKEA

ஸ்வீடனைச் சேர்ந்த அறைகலன் நிறுவனமான IKEA, இந்தியாவின் ஹைதரபாத் நகரில் அடுத்த மாதம் கடை திறக்கவுள்ளது.

வாசிப்புநேரம் -
இந்தியாவில் கடைதிறக்கவிருக்கும் IKEA

(படம்: AFP/Noah Seelam)

ஸ்வீடனைச் சேர்ந்த அறைகலன் நிறுவனமான IKEA,
இந்தியாவின் ஹைதரபாத் நகரில் அடுத்த மாதம் கடை திறக்கவுள்ளது.

பல்லாண்டு முயற்சியின் பலனாக, 37,000 சதுர மீட்டர் அளவுள்ள கடையை அங்கு அந்நிறுவனம் திறக்கவுள்ளது.

அதில் ஆகப் பெரிய அளவில், 1000 இருக்கைகள் கொண்ட சிற்றுண்டிச் சாலையும் அமைந்திருக்கும்.

சுவீடிஷ் இறைச்சி உருண்டைகளுக்குப் பெயர்போனவை IKEAவின் சிற்றுண்டிச் சாலைகள்.

ஆனால் ஹைதரபாத் கிளையில் அவை விற்கப்பட மாட்டா.
சமயம்சார்ந்த அம்சங்களை மனத்தில் கொண்டு உள்ளூர்வாசிகளுக்குப் பிடித்த சுவைக்கேற்ப உணவுவகைகள் தயாரிக்கப்படும் என்று இந்தியக் கிளைக்கான IKEA துணை நிர்வாகி பேட்ரிக் ஆன்ட்டணி கூறினார்.

50 விழுக்காட்டு உணவு சுவீடன் சாயலில் இருந்தாலும் பிரியாணி, சமோசா போன்ற இந்திய உணவு வகைகளும் இருக்கும் என்று அவர் சொன்னார்.

இந்தியக் கிளையில் 1.5 பில்லியன் டாலரை மூதலீடு செய்யத் திட்டமிருப்பதாக IKEA தெரிவித்தது.

மும்பை, பெங்களூரு, புதுடில்லி ஆகிய பெருநகரங்களிலும் கடைகள் திறக்கப்படும் என்றார் திரு ஆன்ட்டணி.

சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களில் கடை திறப்பது பற்றியும் பரிசீலிக்கப்படுகிறது.

இந்தியச் சந்தையில் களம் இறங்குவது குறித்து மிகுந்த உற்சாகமாய் இருப்பதாக அவர் சொன்னார்.

சுமார் 850 பேரை அந்நிறுவனம் வேலையில் நியமிக்கும் என்றும் ஓர் ஆண்டுக்குச் சில மில்லியன் வருகையாளர்களை IKEA ஈர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்