Images
  • ikea singapore
    (படம்: TODAY/Wee Teck Hian)

இந்தியாவில் மேலும் சில நகரங்களில் Ikea கடை திறக்கத் திட்டம்

இந்தியாவில் மேலும் சில நகரங்களில் சிறிய அளவிலான கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது ஸ்வீடனைச் சேர்ந்த அறைகலன் நிறுவனமான Ikea.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் பெங்களூர் நகரில் Ikea, தன்னுடைய மூன்றாவது கடைக்கான நிலந்திருத்தும் நிகழ்ச்சியை நடத்தியது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் பெரிய கடைகளை நிறுவுவதோடு, சிறிய அளவிலான கடைகளையும் நிறுவத் திட்டமிடுவதாக Ikea நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டார்.

பெங்களூர் கடையில் மட்டும், ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7 மில்லியன் வாடிக்கையாளர்களை ஈர்க்க Ikea திட்டமிட்டுள்ளது.

அந்தக் கடை 2020ஆம் ஆண்டு நடுப்பகுதிவாக்கில் திறக்கப்படும்.

மும்பையில் Ikea கடை அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ளது.

இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் இருந்து இணையத்தின் மூலம் பொருட்களை விற்கவும் Ikea முடிவுசெய்துள்ளது.
 

Top