Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19: இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கியது

COVID-19: இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கியது

வாசிப்புநேரம் -
COVID-19: இந்தியாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கியது

படம்: REUTERS

இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 மில்லியனை நெருங்கியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 368,000க்கு மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் 3,417 பேர் மாண்டனர்.

இந்தியாவில் தொடர்ந்து 12 நாள்களாக 300,000க்கு மேற்பட்டோருக்குப் புதிதாக நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ எண்ணிக்கையை விட இந்தியாவில் ஐந்திலிருந்து 10 மடங்கு அதிகமான நோய்த்தொற்று சம்பவங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

உயிர்வாயு, மருத்துவப் பொருள்கள், படுக்கைகள் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து தட்டுப்பாடு நிலவுகிறது.

பல மாநிலங்களில் முடக்கநிலைகளும் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது இந்தியாவில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 19.93 மில்லியன்.

மாண்டோர் எண்ணிக்கைச் சுமார் 219,000-ஆக உள்ளது.

இந்தியாவில் உருமாற்றம் அடைந்துள்ள புதுவகைக் கொரோனா கிருமி சுமார் 17 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்