Images
  • India Covid
    படம்: Diptendu DUTTA / AFP 

இந்தியாவில் 3ஆம் கட்ட COVID-19 பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு : இந்திய மருத்துவக் கழகம்

இந்தியாவில் மூன்றாம் கட்டக் கிருமிப்பரவலுக்கான வாய்ப்பு குறைவு என்று அந்நாட்டு மருத்துவக் கழகம் கூறுகிறது.

தற்போதுள்ள சூழலில் Booster கூடுதல் தடுப்பூசி தேவையில்லை என்று சொன்ன கழகம், தடுப்பூசி போட்டுக் கொள்வோர் விகிதத்தை உயர்த்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

இந்திய மக்களில் தகுதிபெற்ற சுமார் 82 விழுக்காட்டினர் ஒருமுறை தடுப்பூசி போட்டு முடித்துள்ளனர். ஆனால், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் விகிதம் அதில் பாதி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.   

Top