Images
  • covid india
    (படம்: REUTERS/Francis Mascarenhas)

COVID-19: இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 52,000க்கும் அதிகமானோருக்கு நோய்த்தொற்று

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒரே நாளில் புதிதாக 52,000க்கும் அதிகமானோருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 52,123 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதியானது.

கடந்த சில வாரங்களாகவே, இந்தியாவில் நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் அதிகரித்துவருகிறது, அதனால், அங்கு பல இடங்களில் முடக்க நிலை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுமார் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்; கிட்டத்தட்ட 35,000 பேர் மாண்டனர்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.

  

Top