Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

TikTok மீதான தடை தொடரும் - தமிழக நீதிமன்றம்

பிரபலக் காணொளிச் செயலியான TikTok மீதான தடையை   நீக்கக்கோரும் மனுவை தமிழக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
TikTok மீதான தடை தொடரும் - தமிழக நீதிமன்றம்

படம்: AFP/SANJAY KANOJIA

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிரபலக் காணொளிச் செயலியான TikTok மீதான தடையை நீக்கக்கோரும் மனுவை தமிழக நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்தியாவில் மில்லியன்கணக்கான பயனீட்டாளர்களைக் கொண்டிருக்கும் TikTok நிறுவனத்திற்கு இது பெரிய அடியாக இருக்கலாம்.

அண்மையில் TikTok செயலிக்குத் தடை விதிக்கும்படி தமிழக நீதிமன்றம்  கேட்டுக்கொண்டது, ஆனால் அது

பேச்சுரிமைக்கு எதிரான நடவடிக்கை என்று அதனை உருவாக்கிய Bytedance Technology நிறுவனம் குறைகூறியிருந்தது.

ஆனால் TikTok தற்போது Apple, Google தளங்களில் தொடர்ந்து சேவை வழங்கி வருகிறது.

தடை எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றிய தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

செயலி ஆபாசக் காணொளிகளை ஊக்குவிப்பதாகவும் இளம் பயனீட்டாளர்கள் அதன் வழி பாலியல் துன்புறுத்தல்களுக்கு இலக்காகலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்