Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

Amphan சூறாவளி: மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெறுவதால் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம்

Amphan சூறாவளி: மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெறுவதால் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம்

வாசிப்புநேரம் -
Amphan சூறாவளி: மீட்புப்பணிகள் தாமதமாக நடைபெறுவதால் இந்திய மக்கள் ஆர்ப்பாட்டம்

படம்: AFP

இந்தியாவின் கொல்கத்தா நகரில் Amphan சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிசெய்ய அதிகாரிகள் அதிக நேரம் எடுப்பதாகக் கூறி, ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை, வெள்ளமடைந்த பகுதிகள் போன்றவற்றைச் சீர்செய்வதில் அதிகாரிகள் தாமதமாகச் செயல்படுவதாக மக்கள் சினம் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் 5,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகக் கொல்கத்தா காவல்துறை தெரிவித்தது.

பங்களாதேஷூம் சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் மொத்தம் 112 பேர் சூறாவளியால் மாண்டனர்.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் மாண்டவர்கள் எண்ணிக்கை வரும் நாள்களில் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவிலும் பங்களாதேஷிலும் COVID-19 சம்பவங்கள் அதிகரித்துவரும் இந்த நேரத்தில் வீசிய Amphan சூறாவளியால் அந்நாடுகளின் அதிகாரிகள் பெரும் சவாலை எதிர்நோக்குகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்