Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: Antigen Rapid Test பரிசோதனையை அதிகமாகப் பயன்படுத்துவதால் கிருமிப்பரவலின் உண்மை நிலை தெரியாமல்போகலாம்

இந்தியா: Antigen Rapid Test பரிசோதனையை அதிகமாகப் பயன்படுத்துவதால் கிருமிப்பரவலின் உண்மை நிலை தெரியாமல்போகலாம்

வாசிப்புநேரம் -

Antigen Rapid Test பரிசோதனை முறையை இந்தியா தற்போது அதிகமாகப் பயன்படுத்தி வருகிறது. அதனால், நோய்ப்பரவலின் உண்மையான நிலையைத் துல்லியமாகக் கணிக்க முடியாமற்போகலாம் என Thyrocare Technologies நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோய் அறிகுறிகளைக் கண்டறியும் முன்னணி நிறுவனம் அது.

Antigen Rapid Test பரிசோதனை முறை 15 நிமிடங்களில் முடிவுகளைத் தெரியப்படுத்தும். 80இலிருந்து 90 விழுக்காடுவரையிலான துல்லியத்தன்மை கொண்டது அந்தச் சோதனைமுறை.

RT-PCR சோதனை சில மணி நேரத்திற்குப் பிறகே முடிவுகளைக் காட்டும். இருப்பினும், அதன் துல்லியத்தன்மை 95 விழுக்காட்டுக்கும் அதிகம்.

இந்தியாவில் நடத்தப்படும் பரிசோதனைகளில்
சுமார் 60 விழுக்காட்டுச் சோதனைகள், Antigen Rapid Test முறையில் நடத்தப்படுகின்றன.

உலகளாவிய அதன் பயன்பாடு 10 விழுக்காடு மட்டுமே. எனவே, இந்தியாவின் கிருமிப்பரவல் குறித்த உண்மை நிலை இந்தச் சோதனை முறையால் குறைத்து மதிப்பிடப்படலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்